Monday, March 9, 2015



நடக்கவே முடியாததைக் கூட
நடந்ததாய் சித்தரிக்க
சாமர்த்தியம் உனக்கிருந்தால்
நிலவைக் கூட
புட்டியில் அடைத்திடலாம்!
ஒரு புட்டியில்
ஆகாயமும்,பூமியும்
சிறைவைக்க 
உன் அறிவை விரிவு செய்தால் போதுமானால்
அறிவுள்ளவன் மீனுடன் சேர்த்து
கடல் நீரையும் அள்ளி விடுவான்!
அறிவற்றவன் கிடைத்ததையும்
கோட்டை விடுவான்!
புத்தியுள்ளவன் பிழைத்துக் கொள்வான்!
புத்திசாலிகள் எதையும் காட்டிக் கொள்வதுமில்லை!
ஆகவே அறிவை வளர்த்திடு!
பேதைமைப் போக்கிடு!

1 comment: